அமுதப்ரியன்

இட்லிவடைதாசன் நான்
donduவின் பேரன் நான்
விசுவாமித்திரரின் வழிவந்தவன்
நல்லது கெட்டது சொல்லப்போகிறேன்

Thursday, October 27, 2016

தமிழ்நாட்டுல யாருக்கும் இல்லாத கெட்ட பழக்கம் எனக்கு இருக்கு - பைரவா விஜய் - புது கெட்டப்பில்

Vijaya Productions - B.Venkatrama Reddy Presents

“BAIRAVAA”

Starring: ‘Ilayathalapathy’ Vijay, Keerthy Suresh, Jagapathi Babu, Daniel Balaji, Thambi Ramaiah,Sathish, Y.G.Mahendran, Naren, Harish Utthaman, Siju Rose, AparnaVinoth, Vijayaraghavan, Seema Nayar

Produced by B. Bharathi Reddy
Written & Directed by Bharhathan
Music : Santhosh Narayanan
D.O.P : M.Sukumar
Editor : Praveen K.L
Art : M.Prabhakaran
Stunts : ‘Anl’Arasu
Choreography : Dinesh
VFX Supervisor : Hari Haransuthan
Audiography : Tapas Nayak
Lyrics : ‘Kaviperarasu’ Vairamuthu
Co-Director : Raja Pandian, Shantha Mohan
Associate Director & Assts : Siva Prakash, Purushothaman, Bharathi Selvan, Umapathy, Kamesh, Stalin
Co Camera Man : Palani, Perumal
Associate Editor: Gullapalli Madhav Kumar
Costume Designer : Sathya NJ,Niranjani,Chaitanya
PRO : Riaz K Ahmed
Stills : Ameer
Publicity Designs : “Thandora” Chandru
Project Head : A.Ravi Chandran
Line Producer: M.Kumaran
Production Controller : M.Tandava Krishna,R.Udayakumar
Production Executive : K.T.S Swaminathan

Monday, April 11, 2011


கடந்த 15 வருடங்களாக நான் திரு.வைகோ அவர்களை கவனித்து வருகிறேன்.




கொண்ட கொள்கையில் உறுதியான நேர்மையும், சிம்ம குரலாக தனது குரலை எடுத்து வைக்கும் திறமும், யாருக்கும் அஞ்சாத வீரமும் கொண்டவர். அதிமுகவுக்காக கடந்த 5 வருடங்களாக கிட்டத்தட்ட கொ.ப.செவாகவே ஆகிப்போனது மதிமுக. யார்க்கும் யாரும் சளைத்தவரில்லை என்ற போக்கு உடைய திமுக அதிமுக தலைமையிடம் ஏமாந்து போனார் வைகோ. அவருடைய ஆளுமைத்திறமும், தமிழும் இங்கு தமிழ்நாட்டில் யாரும் அவருக்கு நிகரில்லை எனலாம். தற்போதைய சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டில் மதிமுகவை நடத்திய விதம் அனைவருக்குமே மனசஞ்சலத்தை ஏற்படுத்தியது எனலாம். அந்தளவுக்கு கீழ்த்தரமாக நடத்தப்பட்டனர். அடுத்த வரும் தேர்தல்களில் நிச்சயம் மதிமுக மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் என நான் நினைத்திருந்தேன். ஆனால் தற்போது நடந்து வரும் சூழல் என்னைப் போன்ற நடுநிலையாளர்களின் கருத்துகளுக்கு சம்மட்டி அடிப்பது போல இருக்கிறது. முதலில் வைகோ அவர்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தார். அவரது முடிவு சரியானதுதான் என அப்போதைய சூழல் எடுத்துரைத்தது. அனைத்து தமிழ் மக்களுக்கும் வைகோவின் தைரியத்தின் மேல் மரியாதை பிறந்தது. இந்த தைரியம் தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற கட்சியினருக்கு உண்டா என்பது தெரியவில்லை. இப்போது சில இடங்களில் வைகோவின் கட்சியினர் சிலர் சிற்சில இடங்களில் சோரம் போக துவங்கியுள்ளனர். இது வைகோ அவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினர் செய்யும் செயலாகவே பார்க்கப்படுகிறது.


மேலும் மதிமுகவின் கொள்கைப்பரப்புசெயலாளர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் தலைமையில் சிற்சில இடங்களில் பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த பட்டிமன்றங்களில் அதிமுகவை சாடி கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.



இதுவும் அவர்களுக்கான உரிமைதான். ஆனால் காங்கிரஸுக்கு ஆதரவாக சில இடங்களில் மதிமுக தொண்டர்கள் சிலர் வேலை செய்யத் துவங்கியுள்ளதுதான் என்னைப் போன்ற தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு மனசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசியம் என்பதுதான் மதிமுகவின் தலையாய கொள்கை என்பது அனைவருக்கும் தெரியும்.


அதிமுகவை பழி வாங்க ஈழத்தில் நடந்த வன்கொடுமைகளுக்கு காரணமான காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிப்பதும், ”கை” கட்டி வாய் மூடி மௌனியாக இருந்த திமுக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை.


மேலும்


விண்ணை முட்டும் விலைவாசி கடும் உயர்வு,


சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு,


ஊழலில் கின்னஸ் சாதனையான 2G,


கனவாகி போன 2 ஏக்கர் நிலம்,


மணல் திருட்டு,


அரிசி திருட்டு,


நதிநீர் பிரச்சனைகளில் முடிவெடுக்க தைரியம் இல்லாமை,


ரவுடிகளின் ராஜ்ஜியம்,


தா.கிருட்டிணன் (தற்)கொலை செய்து கொண்டது,


மூன்று பத்திரிகையாளர் சகோதரர்கள் தங்களை தாங்களே மாய்த்து கொண்டது,


சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் வழக்கறிஞர்கள் மீதும், நீதிபதிகள் மீதும் நடத்திய சர்க்கஸ் விளையாட்டு,


தன் குடும்ப போற்றுதலுக்காக செம்மொழி மாநாடு நடத்தியது,


மாநாட்டுக்கு வராமல் போனவர்கள் ஒரு தகப்பனுக்கு பிறக்கவில்லை என ஆசிர்வாதம் செய்தது,


ஈழப்பிரச்சனைகளை நீர்த்து போக செய்தது,


ஈழத்தில் நமது உறவுகள் மாய்ந்து கொண்டிருக்கும் போது அமைச்சரவை பங்கீட்டில் அனாயசமாக ஈடுபட்டது,


போன்ற என்னற்ற சாதனைகளால் திக்குமுக்காடி போயிருக்கும் தமிழக மக்களுக்கு ஆதரவாக இருக்கும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் உங்கள் கட்சி தொண்டர்களுக்கு நீங்கள் தெரிவிக்கப் போவது என்ன?


இதெல்லாம் போகட்டும்.


ஈழத்தில் நடந்த கொடூரங்களை மனிதனாக பிறந்த யாராலும் மறக்கவும், மறுக்கவும் முடியுமா?


ராஜபக்‌ஷேவே இந்தியா தான் எங்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தது என்று அறிவித்ததையும், அந்த காங்கிரஸை உங்கள் தொண்டர்கள் ஆதரிப்பது முறைதானா? சரிதானா?


நீங்கள் ஊழலுக்கு எதிரானவர் என்பது அனைவருக்குமே தெரியும். கடந்த சில நாட்களுக்கு முன் அன்னா ஹஸாரே என்றொரு கல்கி அவதாரம் உண்ணாவிரதம் இருந்தாரே, அதற்காவது உங்கள் ஆதரவை தெரிவித்தீர்களா?(அது சரி உங்களை சொல்லியும் குற்றமில்லை. மாப்பிள்ளை படத்திற்கு க்யுவில் நின்று டிக்கெட் வாங்கி பார்த்தும், ஐபிஎல் போட்டிக்கு க்யுவில் நின்று பார்த்தும் நேரம் செலவழிக்கும் மக்கள்தானே நாங்கள்)


இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நாங்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கலாமா? வேண்டாமா? என நீங்கள் சொன்னால் போதும். இன்னும் 24 மணி நேரங்கள் இருக்கின்றன.


இனி முடிவு உங்கள் கையில்....


அமுதபிரியன்.

Saturday, November 21, 2009

வழக்கு சாமியோ வழக்கு


சென்னையில் சுப்பிரமணியசாமி பேட்டி: கூடிய விரைவில் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்கு செய்யப் போகிறேன். பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பிரதமர் இதில் நடவடிக்கை எடுக்கா விட்டால் அவர் மீதும் வழக்கு போடுவேன்.
(நல்ல வேளை இந்த செய்தியை போடாத பத்திரிகைகள் மீது வழக்கு தொடருவேன் என்று சொல்லவில்லை)

இதற்கு என்ன நடக்கும் என்று ஒரு சிறிய கற்பனை!!!

(டில்லியில் ....)

கேள்வி: உங்கள் மீது வழக்கு தொடர்வேன் என்று கூறியிருக்கிறாரே சு.சாமி?
ராசா: யார் அவர்? அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் (தலைவருக்கு அப்படியே SMS அனுப்புகிறார்)


(சென்னையில்...)

கருணாநிதி: பார்த்தாயா தமிழா, தாழ்த்தப்பட்ட சகோதரன் கஷ்டப்படுகிறான்! என்ன செய்யப் போகிறாய்? என்ன சொல்லப் போகிறாய்? பார்ப்பனர்களின் இராஜ்ஜியம் இன்னும் இருக்கிறது? நாம் இன்னும் இதே நிலையில்தான் இருக்கிறோமா?

அதே சென்னையில்

வீரமணி:(வீரம்?) தாழ்த்தப்பட்டவர் மீது வழக்கு தொடர்ந்த பார்ப்பனர் மீது திக சார்பில் வழக்கு தொடரப்படும்.


தமிழ்நாட்டில்..
மக்கள்: மானாட மயிலாடவில் நமிதா போட்டிருந்த டிரஸ் நல்லாயிருந்ததுல்ல..

Friday, November 20, 2009

இட்லிவடையில் வந்த எனது பதிவு

அனைவருக்கும் வணக்கம்.

கடந்த மாதக் கடைசியில் திருவண்ணாமலை சென்றிருந்தேன். அது ஒரு பௌர்ணமி இல்லாத, பிரதோஷம் இல்லாத நாள். கிரிவலம் செல்லும் வழியில் மலையின் நேர் பின்னால் மேற்கு திசையில் வாயு லிங்கம் அருகில் ஒரு மனிதரை (அவருடன் சில சீடர்கள்) சந்திக்க நேர்ந்தது. அவருக்கு வயது கூடிப்போனால் 32 முதல் 35 வயது வரை இருக்கும். ஆனால் அவருடைய சீடர்கள்(அவருடன் இருந்தவர்கள்) அவருக்கு வயது 5000 என்றனர். அவருக்கு அஷ்டமாசித்திகளும் தெரியும் என்றனர். அவருடன் நடந்த ஒரு கலந்துரையாடலை இட்லிவடை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள கொடுக்கிறேன். “பாரடா வான்மதியிலே பார்தான் பாதியாகிடுமே” என்று ஒரு பாடலை எடுத்து விட்டு அதற்கு அர்த்தம் சொல்ல ஆரம்பித்தார். எனது இதயம் பகீர் என்றது.

அவர் சொன்ன பகீர் தகவல்களில் சில:

[1] 2012 உலகம் அழிவு ஆரம்பம்.

[2] கழுகு தற்போது 40 முட்டைகள் இடுகின்றனவாம், கழுகுகள் அதிகரித்தால் மனிதனைக் கொல்லுமாம்.(இதை ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார்)

[3] கிலோ அரிசி 1000ரூபாயைத் தொடுமாம்.

[4] 1பவுன் தங்கம் 50000ரூபாயைத் தொடுமாம்.

[5] ஐரோப்பிய கண்டத்தில் இந்தியாவிற்கு கண்டம் கொடுக்க ஒருவன் உதித்து விட்டானாம். அவனுடைய ஆட்கள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்கள், நகரங்கள் அனைத்திலும் ஊடுருவி உள்ளார்களாம். அனைத்து மக்களுடைய அங்க அடையாளங்கள் ஆவனங்கள் அவனிடத்தில் உள்ளதாம்.

[6] 2012ல் இந்தியாவை வெற்றி கொள்வானாம்.

[7] இந்தியாவில் இருக்கும் அனைத்து CALLCENTER களையும் அந்த ஐரோப்பிய மனிதன் வாங்கிவிட்டான்.

[8] உலகத்தின் மொத்த மக்கள் தொகை 100கோடியாகி விடும்.

[9] மின்சார உற்பத்தி முழுமையாக பாதிக்கப்படும். பின் மின்சாரமே இல்லாமல் போகும்.

[10] சூரியனிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும். சூரியன் ஒளி பாதியாக குறையும்.

[11] 30கோடி பேர்தான் இந்தியாவில் இருப்பார்களாம்.

[12] ஒரே நேரத்தில் சூரியனும் சந்திரனும் தெரியும்.

[13] மக்கள் சாப்பாட்டிற்காக ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள்.

[14] இந்தியாவில் இப்போதிருக்கும் அரசியல் அமைப்பு மாறும்.

[15] இந்தியாவில் அதிபர் தேர்தல் நடக்கும்.

[16] இப்போதிருக்கும் பல நகரங்கள் இந்தியாவில் மூழ்கிப் போகும்.

[17] கடலுக்குள் இருக்கும் நகரங்கள் பல வெளிவரும்.

[18] புதிய புதிய விலங்குகள் உருவாகும்.

[19] புதிது புதிதாக நோய்கள் பிறக்கும்.

[20] உலகமெங்கும் வறட்சியின் பிடியில் இருக்கும்.

என்று நீண்டு கொண்டே செல்கிறது அவரது வாக்கு.

சரி எப்போது இதுவெல்லாம் சரியாகும் என்றேன். 2016ல் முழு உலகம் அழிந்து பின் 2019ல் புது உலகம் பிறக்கும் என்றார் புன்முறுவல் பூத்தபடி. மேலும் உண்மையான ஜோதிடர்களுக்கு இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்றார். (ஐயா ஜோதிடர் ராமகிருஷ்ணன் அவர்களே பதில் தெரியுமா)

நன்றி:இட்லிவடை.